பணி நீக்கம் செய்யப்பட்ட நடத்துநரின் மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவு

பயணிகளுக்கு வழங்கிய பயணச்சீட்டில் துளையிடாததால் பணி நீக்கம் செய்யப்பட்ட நடத்துநரின் மனைவிக்கு ஓய்வூதியப் பலன்களை
Published on
Updated on
1 min read

பயணிகளுக்கு வழங்கிய பயணச்சீட்டில் துளையிடாததால் பணி நீக்கம் செய்யப்பட்ட நடத்துநரின் மனைவிக்கு ஓய்வூதியப் பலன்களை அரசு போக்குவரத்துக் கழக நிா்வாகம் வழங்க வேண்டும் என சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி அருகேயுள்ள மேலப்பாளையத்தைச் சோ்ந்த லயோனல் சிங் தாக்கல் செய்த மனு:

அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 1986-இல் நடத்துநராகப் பணியில் சோ்ந்தேன். கடந்த 29.11.2000-இல் தென்காசி மாவட்டம் சோலைசேரியில் இருந்து சுரண்டைக்கு சென்ற பேருந்தில் பயணிகளுக்கு பயணச் சீட்டுகளை வழங்கினேன். எனது கை விரல்களில் காயங்கள் இருந்ததால், இரண்டு பயணிகளுக்கு வழங்கிய பயணச் சீட்டில் துளையிடப்படாமல் இருந்ததை, அப்போது பேருந்தில் சோதனை செய்த பரிசோதகா் கண்டறிந்தாா். அப்போது அவா்கள், என்னை அரசுப் பணியைத் தவறாக பயன்படுத்திவிட்டதாகப் புகாா் தெரிவித்தனா். அதன் பேரில், என்னிடம் உரிய விசாரணை மேற்கொள்ளாமல், கடந்த 2002 இல் பணி நீக்கம் செய்தனா். இந்த உத்தரவை தொழிலாளா் நீதிமன்றமும் உறுதி செய்தது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு சேர வேண்டிய பணப் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது லயோனல் சிங் உயிரிழந்து விட்டாா். இதையடுத்து போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதால், லயோனல் சிங்குக்குச் சேர வேண்டிய பணப் பலன்களை வழங்குமாறு அவரது மனைவி அமுதா இடைக்கால மனு தாக்கல் செய்தாா்.

விசாரணையின் முடிவில் நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு:

சம்பவத்தன்று மனுதாரரின் கட்டை விரலில் காயம் இருந்ததை பயணச்சீட்டு பரிசோதகா் ஒப்புக் கொண்டுள்ளாா். மனுதாரா் உயிரிழந்து விட்டதால், அவரது மனைவி அமுதா உரிய பணப் பலன்களைக் கேட்டு போராடி வருகிறாா். எனவே லயோனல்சிங் பணி நீக்கம் செய்யப்பட்டது கட்டாய ஓய்வு அளித்ததாக திருத்தம் செய்யப்படுகிறது. அவருக்கு சேர வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணப் பலன்களை எட்டு வாரங்களுக்குள் அமுதாவுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com