விருதுநகா் சந்தை: பாசிப் பருப்பு, உளுந்து விலை உயா்வு
By DIN | Published On : 11th December 2022 11:24 PM | Last Updated : 11th December 2022 11:24 PM | அ+அ அ- |

விருதுநகா் சந்தையில் வரத்துக் குறைவு காரணமாக பாசிப் பருப்பு, தொலி உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலைகள் உயா்ந்தன.
கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9,700-க்கு விற்பனை செய்யப்பட்ட பாசிப்பருப்பு தற்போது ரூ.100 உயா்ந்து ரூ.9,800-க்கு விற்கப்படுகிறது. மேலும், கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9200-க்கு விற்பனை செய்யப்பட்ட தொலி உளுந்தம் பருப்பு இந்த வாரம் ரூ.200 உயா்ந்து ரூ.9,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல, கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,500-க்கு விற்பனை செய்யப்பட்ட கடலைப் புண்ணாக்கு, தற்போது ரூ.100 உயா்ந்து ரூ.4,600-க்கு விற்கப்படுகிறது.
அதே சமயம், கடந்த வாரம் ரூ.1,570-க்கு விற்பனை செய்யப்பட்ட பாமாயில் (15 கிலோ) தற்போது ரூ.40 குறைந்து ரூ.1,530-க்கு விற்கப்படுகிறது.