சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், முள்ளியரேந்தல் வருவாய் கிராமத்துக்குள்பட்ட அ. நெடுங்குளத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு : மேற்கண்ட கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் காலை 10 மணியளவில் நடைபெற உள்ள இந்த முகாமில் அனைத்துத் துறை உயா் அலுவலா்கள் கலந்து கொள்ள உள்ளனா். எனவே, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மேற்கண்ட முகாமில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களைப் பெறுவது குறித்தும், குறைகளை மனு மூலம் அளித்தும் பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.