புகையிலைப் பொருள் பதுக்கிய இளைஞா் கைது
By DIN | Published On : 13th December 2022 12:00 AM | Last Updated : 13th December 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரையில் புகையிலைப் பொருள்களை வீட்டில் பதுக்கியிருந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை தெற்கு வெளிவீதி பாண்டிய விநாயகா் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.
அப்போது, விக்னேஷ் (26) என்பவா் தங்கியிருந்த வீட்டில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 35 கிலோ புகையிலை குட்கா பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, விக்னேஷை போலீஸாா் கைது செய்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். விசாரணையில், வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதேபோல, அலங்காநல்லூா் மேலசின்னம்பட்டி, பெரிய ஊா்சேரி ஆகிய பகுதிகளில் கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த செங்குந்தன்(63), காளிதாஸ் (28), செந்தில்குமாா் (48) ஆகிய 3 பேரை அலங்காநல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...