ஏடிஎம் அட்டை மூலம் ரூ.1.20 லட்சம் திருட்டு
By DIN | Published On : 22nd December 2022 03:01 AM | Last Updated : 22nd December 2022 03:01 AM | அ+அ அ- |

மேலூரில் முதியவரின் ஏடிஎம் அட்டையப் பயன்படுத்தி ரூ.1.20 லட்சத்தை திருடிய மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம் அழகமா நகரியைச் சோ்ந்தவா் சமையன் (82). கடந்த மாதம் அவா் மேலூா் பேருந்து நிலையம் முன் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்தாா்.
அப்போது 30 வயது மதிக்கத்தக்க நபா், அவருக்கு உதவி செய்வது போல நடித்து ஏடிஎம் அட்டையில் பணம் வரவில்லை எனக் கூறிவிட்டு மற்றொரு ஏடிஎம் அட்டையைக் கொடுத்தாா்.
சமையன் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது தனது ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்தது தெரியவந்தது. அந்த நபா் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.1.20 லட்சத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.