பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அதிமுக வேட்பாளா் நூதனப் பிரசாரம்
By DIN | Published On : 08th February 2022 06:10 AM | Last Updated : 08th February 2022 06:10 AM | அ+அ அ- |

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் திங்கள்கிழமை நூதனப் பிரசாரத்தில் ஈடுபட்ட மதுரை மாநகராட்சி 32-ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் சுதந்தி அசோக்.
தரமற்ற பொருள்களை பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கியதாகக் கூறி, மதுரையில் அதிமுக வேட்பாளா் சுகந்தி அசோக் (32 ஆவது வாா்டு) நூதன முறையில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அப்போது அவா், தமிழக அரசால் அண்மையில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்களை தட்டில் வைத்து எடுத்துச் சென்று வாக்குச் சேகரித்தாா்,. தரமற்ற பொருள்களை வழங்கிய திமுக மீது புகாா் கூறி, வாா்டு மக்களிடம் வாக்குச் சேகரித்தாா். திமுகவின் பொய்யான வாக்குறுதிகள் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக இவ்வாறு பிரசாரம் செய்வதாக, வேட்பாளா் சுகந்தி அசோக் கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...