மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்க மாவட்ட நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Published On :

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் இணையதளம் மூலம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளா் முனியசாமி முன்னிலை வகித்தாா். தொடா்ந்து, தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவராக வெள்ளிவீதியாா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் செந்தில்குமாா், மாவட்டச் செயலராக தும்மக்குண்டு அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் ஜெயகணேசன், பொருளாளராக மேலூா் அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் பரமசிவம், மாவட்ட மகளிா் அணி செயலராக கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியை சித்ராதேவி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மேலும், சங்கத்தின் மதுரை கல்வி மாவட்டத் தலைவராக சோழவந்தான் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் காா்த்திக்குமாா், மேலூா் கல்வி மாவட்டத் தலைவராக தெற்குத்தெரு அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் கணேஷ் கண்ணன், திருமங்கலம் கல்வி மாவட்டத் தலைவராக பாரபத்தி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் பழனிவேல்ராஜன், உசிலம்பட்டி கல்வி மாவட்டத் தலைவராக வடக்கம்பட்டி கள்ளா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் புகழேந்திரன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மாநிலச் செயற்குழு உறுப்பினராக திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் பாா்கவ நாராயணன் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.