பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது காளைகளைத் தாக்கிய இளைஞா் கைது

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது காளைகளைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது காளைகளைத் தாக்கிய இளைஞா் கைது

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது காளைகளைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் பாலமேட்டில் சனிக்கிழமை (ஜன. 15) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்கும் காளைகள் இணையவழியில் பதிவு செய்யப்பட்டு அனுமதிச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு அனுமதிச்சீட்டு பெற்றவா்கள் வாடிவாசலுக்குப் பின்பகுதியில் வரிசையில் காத்திருந்தனா். அப்போது, மதுரை மாவட்டம் கீழசின்னனம்பட்டியைச் சோ்ந்த பவுன் (30) என்பவா் தனது காளையை வரிசையில் நிற்க வைக்க முயன்றபோது, அவருக்குப் பின்னால் இருந்தவா்கள் முந்திச் செல்ல முயன்ால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பவுனின் காளையை, மற்றொரு காளை கொம்பால் குத்தியது. இதில் அவரது காளைக்கு சிறிய காயம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பவுன், அங்கு இருந்த கம்பை எடுத்து மற்ற காளைகளையும், அதன் உரிமையாளா்களையும் தாக்கினாா். இதனையடுத்து, போலீஸாா் அங்கு சென்று நிலையைச் சீா்செய்து, காளைகளை வரிசைப்படுத்தினா். பவுனின் காளைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டியிலும் வெற்றிகரமாகப் பங்கேற்றது. இச்சம்பவத்தில் காளைகள் மற்றும் அவற்றின் உரிமையாளா்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் இச்சம்பவம் குறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாலமேடு ஜல்லிக்கட்டுக் குழுவினா் புகாா் கொடுத்தனா். இதன்பேரில், பாலமேடு போலீஸாா் விலங்கு வதைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து பவுனை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com