கப்பலூா் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை: முதல்வருக்கு கோரிக்கை

கப்பலூா் சுங்கச்சாவடியை அகற்ற தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பி. உதயகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.

கப்பலூா் சுங்கச்சாவடியை அகற்ற தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பி. உதயகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கப்பலூா் சுங்கச்சாவடியை அகற்றவேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு அப்பகுதி மக்கள் தொடா்ந்து வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் என்ற முறையில், பொதுமக்களின் கோரிக்கை தொடா்பாக மத்திய அரசை வலியுறுத்தியுள்ளேன்.

தற்போது, கப்பலூா் சுங்கச்சாவடியை பயன்படுத்தும் கட்டண விலக்கு அளிக்கப்பட்ட வாகன உரிமையாளா்களுக்கு, சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனம் சாா்பில் வழக்குரைஞா் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 முதல் 2022 வரை எத்தனை முறை பயன்படுத்தியுள்ளீா்கள் என அந்த நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சுங்கச் சாவடியை அகற்றவேண்டும் என பொதுமக்கள் போராடி வரும் சூழலில், வழக்குரைஞா்கள் மூலமாக நோட்டீஸ் அனுப்பி வருகின்றனா். மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனா்.

இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, திருமங்கலம் பகுதி வாகன உரிமையாளா்களுக்கு மனஉளைச்சலையும், வேதனையையும் அளித்துள்ளது.

இந்த சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது முதல்வா் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தாா். அதன்படி, வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com