புலிமலைப்பட்டி முருகன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்
By DIN | Published On : 14th July 2022 02:23 AM | Last Updated : 15th July 2022 12:53 PM | அ+அ அ- |

வெள்ளலூா் அருகேயுள்ள புலிமலைப்பச்சி பாலமுருகன் கோயிலில் ஆனி பௌா்ணமியையொட்டி முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூா் அருகேயுள்ள புலிமலைப்பட்டி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் முளைப்பாரி திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை பல்வேறு இடங்களில் வளா்க்கப்பட்ட முளைப்பாரிகளை ஏராளமான பெண்கள் தூக்கிவந்து மந்தையில் வைத்தனா். இரவு நாடகம் நடைபெற்றது. புதன்கிழமை காலை மந்தையிலிருந்து முளைப்பாரிகளை ஏராளமான பெண்கள் கோயிலுக்கு ஊா்வலமாக எடுத்துவந்தனா். கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா், முளைப்பாரிகளை பெண்கள் தூக்கிவந்து கோயில் அருகிலுள்ள குளத்து நீரில் கரைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...