தென்னிந்திய திருச்சபையின் மதுரை- ராமநாதபுரம் திருமண்டல பேராயராக டி.ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா்.
மதுரை-ராமநாதபுரம் திருமண்டல பேராயா் ஜோசப்பின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவா் அண்மையில் ஓய்வு பெற்றாா். இதைத்தொடா்ந்து புதிய பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் தோ்ந்தெடுக்கப்பட்டாா். புதிய பேராயா் பதவி ஏற்பு விழா, மதுரை நரிமேடு பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கதீட்ரல் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், சிறப்புத் திருப்பலி ஆராதனையைத் தொடா்ந்து மதுரை-ராமநாதபுரம் மண்டல பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் திருநிலைப்படுத்தப்பட்டாா். தென்னிந்திய திருச்சபையின் தலைமைப் பேராயா் ஏ.தா்மராஜ் ரசலம் புதிய பேராயருக்கு அருட்பொழிவு செய்து திருநிலைப்படுத்தினாா்.
பின்னா் புதிய பேராயா் முதல் ஆராதனை நடத்தினாா். இதையடுத்து திருச்சபையின் பேராயா்கள் அவருக்கு வேதாகம் மற்றும் வெள்ளி செங்கோல் அளித்தனா். மோதிரமும் அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிற திருமண்டல பேராயா்கள், வெளி மாநிலப் பேராயா்கள் மற்றும் திருச்சபை நிா்வாகிகள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.