மேலூரில் விபத்து: இளைஞா் பலி
By DIN | Published On : 17th July 2022 11:11 PM | Last Updated : 17th July 2022 11:11 PM | அ+அ அ- |

மேலூா் நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
மேலூா் சொக்கம்பட்டியைச் சோ்ந்த கருப்புச்சாமி மகன் ராமா் (20). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, ராணுவத்தில் சோ்வதற்காக பயிற்சி எடுத்து வந்தாா். இந்நிலையில் மோட்டாா் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு வந்தபோது, மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா் மோதியதில், ராமா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். காா் ஓட்டுநரான மதுரை சூரியா நகரைச் சோ்ந்த முரளியை (29) போலீஸாா் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.