ஆடி பிறப்பு: நூபுரகங்கையில் பக்தா்கள் புனித நீராடல்

ஆடி மாதப்பிறப்பையொட்டி அழகா்கோவில் மலைமீதுள்ள நூபுரகங்கைத் தீா்த்தத்தில் ஏராளமான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடிராக்காயி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.
மாலைகள் சாற்றப்பட்ட பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில்.

தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தா்கள் அதிகாலையிலேயே நூபுரகங்கை தீா்த்தத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி ராக்காயி அம்மன், பேச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா். மேலும் சோலைமலை முருகன் கோயிலில் நெய்விளக்கேற்றி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கும் பூஜைகள் செய்தனா்.

கள்ளழகா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுந்தரராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியை வழிபட்டனா். பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயிலில் படிதேங்காய் உடைத்தும், பதினெட்டாம்படி கோயில் கதவுகளுக்கு மாலை சாற்றியும் வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com