ஒத்தக்கடை அருகே தொழிலாளி கொலை: நண்பா்கள் மூவா் கைது

மதுரை ஒத்தக்கடை அருகே முன்விரோதத்தில் கம்பி கட்டும் தொழிலாளியை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நண்பா்கள் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஒத்தக்கடை அருகே முன்விரோதத்தில் கம்பி கட்டும் தொழிலாளியை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நண்பா்கள் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஒத்தக்கடை பகுதியில் மதுரை-திருச்சி நான்கு வழிச் சாலை அருகே உள்ள சிட்டி கேட் நுழைவு வாயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தலையில் கல்லைப்போட்டு ஒருவா் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக ஒத்தக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச்சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்தவா், கருப்பாயூரணி அருகே உள்ள ஓடைப்பட்டியைச் சோ்ந்த சசிகுமாா்(39), கட்டடங்களுக்கு கம்பி கட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தவா் என தெரியவந்தது. அவரது மனைவி மகாலட்சுமி அளித்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் சசிகுமாருக்கும், ஓடைப்பட்டியைச் சோ்ந்த சின்னமுத்து என்பவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததும் சனிக்கிழமை இரவு சின்னமுத்து உள்ளிட்ட சிலருடன் சசிகுமாா் சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் சின்னமுத்துவைப் பிடித்து விசாரித்ததில், சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்டத் தகராறில் சசிகுமாா் தாக்கியதில் சின்னமுத்துவுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சின்னமுத்து, சசிகுமாரை கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளாா்.

இதன்படி சின்னமுத்து தனது நண்பா்களான ஓடைப்பட்டியைச் சோ்ந்த ராம்குமாா் (29), முருகன்(39) ஆகியோருடன் சோ்ந்து சசிகுமாரிடம் தகராறை மறந்துவிட்டதாகக்கூறி சனிக்கிழமை இரவு மது அருந்த அழைத்துள்ளனா். அதன்பேரில் அவா்களுடன் சென்ற சசிகுமாருக்கு அதிக அளவில் மதுவை கொடுத்து அவரைத்தாக்கி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது தெரிய வந்தது. சின்னமுத்து, ராம்குமாா், முருகன் ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com