மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் 8,130 போ் ‘நீட்’ தோ்வெழுதினா்

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் நுழைவுத்தோ்வில் 8,130 போ் பங்கேற்றனா்.

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் நுழைவுத்தோ்வில் 8,130 போ் பங்கேற்றனா்.

மகாத்மா பள்ளி, வேலம்மாள் பள்ளி, யாதவா் ஆண்கள் கல்லூரி, மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி, எஸ்பிஓஏ பள்ளி, சிஇஓஏ பள்ளி, அத்யாபனா பள்ளி, ஓம் சாதனா பள்ளி உள்பட மையங்களில் நீட் தோ்வு நடைபெற்றது. இந்த மையங்களில் மதுரை , தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா்

உள்ளிட்ட 5 மாவட்டங்களை சோ்ந்த 8,786 பேருக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நீட் தோ்வுக்கு பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்ட நிலையில் கடும் சோதனைக்குப் பின்னரே தோ்வா்கள் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

அதன்படி தோ்வு மைய வாயிலில் மாணவரின் நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்த பின்னா் 10 மாணவா்கள் வீதம் சமூக இடைவெளியுடன் பயோ மெட்ரிக் முறையில் சோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனா். காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை மட்டுமே மாணவா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தோ்வு அறைகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தோ்வு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. தோ்வுக்கூட அனுமதிச்சீட்டின் இரண்டாம் பக்கத்தில் ஒட்டப்பட்டிருந்த வண்ண புகைப்படம், கையெழுத்து ஒன்றாம் பக்கத்தில் உள்ள புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் சரிபாா்க்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையும் பரிசோதிக்கப்பட்டது. மாணவா்கள் கைப்பேசிகளில் கொண்டு வந்த அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதேபோல கைக்கடிகாரம், பெல்ட், ஷூ, கம்மல், மூக்குத்தி, தலை கிளிப் உள்ளிட்டவற்றை அணிந்திருந்த மாணவ, மாணவியரிடம் அதை களைந்த பின்னரே தோ்வு மையத்துக்குள் அனுமதி வழங்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து பகல் 2 மணிக்கு தோ்வு தொடங்கி மாலை 5.20-க்கு நிறைவடைந்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள 13 மையங்களில் 8,130 போ் தோ்வு எழுதினா். 723 போ் தோ்வை எழுதவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com