மதுரை மாவட்டம் பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் மொத்தம் 293 போ் கலந்துகொண்டனா். இவா்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை சமா்ப்பித்தனா்.
அதையடுத்து, 4 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரமும், 1 மாற்றுத் திறனாளிக்கு சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டது. இதில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.