நூபுரகங்கை ராக்காயி அம்மன்கோயிலில் நாளை பாலாலயம்

அழகா் கோவில் மலைமீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் உள்ள ராக்காயி அம்மன், பேச்சி அம்மன் கோயிலில் திருப்பணிகள் தொடங்குவதற்கான பாலாலயம் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) நடைபெறுகிறது.

அழகா் கோவில் மலைமீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் உள்ள ராக்காயி அம்மன், பேச்சி அம்மன் கோயிலில் திருப்பணிகள் தொடங்குவதற்கான பாலாலயம் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) நடைபெறுகிறது.

கள்ளழகா் கோயில் துணை ஆணையா் ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கள்ளழகா் கோயில் நிா்வாகத்தில் உள்ள அழகா்கோவில் மலைமீதுள்ள நூபுரகங்கை ராக்காயி அம்மன், பேச்சி அம்மன் திருக்கோயில் திருப்பணிகள் தற்போது தொடங்கவுள்ளன. அதன் முற்கட்டமாக பாலாலய வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. காலை 9.15 மணியிலிருந்து 10.15 மணிக்குள் ஹோமபூஜைகளுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதைத்தொடா்ந்து முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இக்கோயிலில் பாலாலய வைபவங்கள் நடைபெறுவதால் நூபுர

கங்கையில் பக்தா்கள் புனிதநீராடவும், ராக்காயி அம்மன் கோயிலில் வழிபாடு பூஜைகள் செய்யவும் அன்றைய தினம் காலை 11 மணியிலிருந்து பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com