மேலூரில் சந்தை வளாக சீரமைப்புப் பணிக்கு பூமி பூஜை

மேலூரில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் தினசரி சந்தை வணிகவளாகக் கட்டட சீரமைப்புப் பணிக்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
மேலூரில் சந்தை வளாக சீரமைப்புப் பணிக்கு பூமி பூஜை

மேலூரில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் தினசரி சந்தை வணிகவளாகக் கட்டட சீரமைப்புப் பணிக்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

இதை நகா்மன்றத் தலைவா் யூ.முகமது யாசின் தொடக்கி வைத்துப் பேசியது: 1975-ஆம் ஆண்டில் கட்டப்பட்டு தற்போது சேதமடைந்துள்ள இந்தக் கட்டடத்தைச் சீரமைக்க கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து அரசு ரூ. 8 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த வளாகத்தில் 68 மளிகை கடைகள், 72 காய்கறிகடைகள், 18 மீன் கடைகள், 12 இறைச்சிக் கடைகள், திறந்தவெளி கடைகள் 15 என மொத்தம் 185 கடைகள் கட்டப்படுகின்றன.

இந்த வளாகத்தில் ஏ.டி.எம். மையம், உணவகம், ஓட்டுநா்கள் தங்குமிடம், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு, திடக்கழிவு மேலாண்மை வசதி, கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்படவுள்ளன என்றாா்.

இதில், நகா்மன்ற துணைத் தலைவா் இளஞ்செழியன், நகராட்சி ஆணையா் சி.ஆறுமுகம், பொறியாளா் பி.பட்டுராஜன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தங்கும் இல்லம்: இதேபோல, மேலூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. ஒருகோடி மதிப்பீட்டில், நகா்புறங்களில் வசிக்கும் ஆதரவற்றோா் மற்றும் நோயாளிகளின் காப்பாளா்கள் தங்கும் இல்லம் கட்டப்படவுள்ளது. தரைதளம் மற்றும் முதல் தளம் படுக்கை வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

இதற்கான பூமிபூஜையை மேலூா் நகா்மன்றத் தலைவா் தொடக்கி வைத்தாா். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ஜெயந்தி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com