சுங்கத் துறையால் பறிமுதல் செய்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் திருச்சுழி அருகே அழிப்பு

சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள், விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள தனியாா் நிறுவனத்தின் கழிவுகள் எரியூட்டும் மையத்தில்

மதுரை: சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள், விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள தனியாா் நிறுவனத்தின் கழிவுகள் எரியூட்டும் மையத்தில் எரியூட்டி அழிக்கப்பட்டன.

சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, சுங்கத் துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆணையரகம் சாா்பில் போதை ஒழிப்பு தினம் ஜூன் 8 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாட்டில் வெவ்வேறு 14 பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.

திருச்சி ஆணையரகம் சாா்பில் 303.403 கிராம் கொகைன், 1.60 லட்சம் டிராமடோல் போதை மாத்திரைகள் ஆகியன,

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தனியாா் நிறுவனத்தின் கழிவுகள் எரியூட்டும் மையத்தில் எரியூட்டப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட கொகைன்போதைப் பொருளின் சந்தை மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இவை 2021-இல் தூத்துக்குடி துறைமுகத்தில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மரக் கட்டைகள் எனக் கூறி பனாமாவிலிருந்து கப்பலில் சரக்குப் பெட்டகத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்டவையாகும். அதேபோல, போதை மாத்திரைகள் இலங்கைக்கு படகு வழியாக கடத்த முயன்றபோது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2017 இல் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையை காணொலி வாயிலாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பாா்வையிட்டாா். இந்நிகழ்வின்போது, பெண்களின் முன்னேற்றத்திற்கான சமூகப் பணியாற்றி வரும் பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை கௌரவிக்கப்பட்டாா். சுங்கத் துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு முதன்மை ஆணையா் உமாசங்கா், ஆணையா் டி.அனில், மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு கூடுதல் இயக்குநா் எஸ்.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com