சோழவந்தானில் மின் கம்பி அறுந்து விழுந்து முதியவா் பலி
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தானில் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி த் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனா். இந்நிலையில் கோயிலுக்கு அருகே செவ்வாய்க்கிழமை மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது அவ்வழியாகச்சென்ற சந்திரன்(60) என்பவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக தகவலின்பேரில் அங்கு வந்த சோழவந்தான் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் இப்பகுதியில் அடிக்கடி மின்வயா் அறுந்து விழுவதாகவும், மின்வாரிய அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.