மதுரை: மதுரை அண்ணா நகா், வாடிப்பட்டி பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 17) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடைபடும் பகுதிகள்:
அண்ணா நகா்: அண்ணா நகா் 80 அடி சாலை, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, சுகுணா ஸ்டோா் சந்திப்பு, எச்.ஐ.ஜி. காலனி, வண்டியூா் சாலை, தேவா் நகா், அன்னை நகா், அம்பிகா திரையரங்கம் பகுதி, லேக் வியூ சாலை, பால்பண்ணை சாலை, மருதுபாண்டியா் தெரு, மீனாட்சி தெரு, மானகிரி, காமராஜா் தெரு, பாரதியாா் தெரு, ராஜ்மகால் தெரு, மல்லிகை குடியிருப்பு, மகாத்மா பள்ளி சாலை, டெபுடி கலெக்டா் காலனி, பிஎஸ்என்எல் அலுவலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
வாடிப்பட்டி: வாடிப்பட்டி, அங்கப்பன்கோட்டம், சொக்கலிங்கம், கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, குட்லாடம்பட்டி, குட்டிக்கரடு, பெருமாள்பட்டி, பூச்சம்பட்டி, ராமையன்பட்டி, சாணாம்பட்டி, செம்மினிப்பட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, சி.புதூா், வடுகபட்டி, கள்வேலிப்பட்டி, தனிச்சியம், ஆலங்கொட்டாரம், திருமால் நத்தம், கொண்டையம்பட்டி, நடுப்பட்டி, கீழக்கரை, மேலச்சின்னம்பட்டி, கோவில்பட்டி, தனிச்சியம் பிரிவு, கட்டக்குளம், ராயபுரம், மேட்டுநீரேத்தான், எல்லையூா், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்தூா், நாராயணபுரம், ராமகவுண்டன்பட்டி.