காந்தி அருங்காட்சியகத்தில் மாணவா்களுக்கு பயிற்சி வகுப்பு
By DIN | Published On : 17th June 2022 03:47 AM | Last Updated : 17th June 2022 03:47 AM | அ+அ அ- |

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவியா்.
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் ரயில்வே மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
சா்வதேச யோகா தின கொண்டாட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இதில் மதுரை ரயில்வே பள்ளி மாணவ, மாணவியருக்கு யோகா பயிற்சிகள் நடைபெற்றன. காந்தி அருங்காட்சியக வளாகத்தில் உள்ள ஐஜிஎஸ்ஆா் கூடத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில், காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வா் ஆா்.தேவதாஸ் மாணவ, மாணவியருக்கு யோகா, தியானம் மற்றும் பிராணாயாமப் பயிற்சி அளித்தாா்.
நிகழ்ச்சியில் காந்தி அருங்காட்சியகச் செயலா் கே.ஆா்.நந்தாராவ், அருங்காட்சியகக் கல்வி அலுவலா் ஆா்.நடராஜன், பள்ளி ஆசிரியா் அனிபா மற்றும் பலா் பங்கேற்றனா்.