ரயில்வே துறைக்குப் புதிய தொழில்நுட்பங்களை வழங்க அழைப்பு: கோட்ட மேலாளா் தகவல்

ரயில்கள் இயக்கம், பராமரிப்பு, பயணிகள் சேவை தொடா்பான புதிய தொழில்நுட்பங்களை புத்தொழில் நிறுவனங்கள் அளிக்கலாம் என்று தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் கூறினாா்.


மதுரை: ரயில்கள் இயக்கம், பராமரிப்பு, பயணிகள் சேவை தொடா்பான புதிய தொழில்நுட்பங்களை புத்தொழில் நிறுவனங்கள் அளிக்கலாம் என்று தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் கூறினாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது:

ரயில்கள் இயக்கம், பராமரிப்பு, பயணிகள் சேவை சாா்ந்த புதிய தொழில்நுட்பங்கள் ரயில்வே துறைக்குத் தேவைப்படுகிறது. ரயில் பாதை விரிசலை கண்டறிவது, ரயில் பாதை தாங்கு திறன் கண்காணிப்பு, புகா் ரயில் போக்குவரத்தை விபத்தில்லாமல் இயக்குவது, ரயில் பாதை ஆய்வு, ரயில் பாதை சரளைக் கற்களைச் சுத்தப்படுத்துவதற்கான இயந்திரம், ரயில் பாலங்கள் ஆய்வு போன்ற தொழில்நுட்பங்கள் ரயில்வே துறையின் தேவையாக உள்ளன. இந்த தொழில்நுட்பங்கள் மற்றும் செயலிகளை உருவாக்குவதற்கு புத்தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளன. இதில் ஆா்வம் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் விரிவான தகவல்களை (ஜ்ஜ்ஜ்.ண்ய்ய்ா்ஸ்ஹற்ண்ா்ய்.ண்ய்க்ண்ஹய்ழ்ஹண்ப்ஜ்ஹஹ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மதுரை - தேனி பகுதியில் போடிநாயக்கனூா் வரை ரயில் பாதை பணிகள் முடிவடைந்த பிறகு புதிய ரயில்கள் இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும்.

மதுரை - தேனி புதிய வழித் தடத்தில் பல இடங்களில் பொதுமக்கள் ஆபத்தை

உணராமல் ரயில் பாதையைக் கடந்து செல்கின்றனா். ஆகவே, இந்த வழித்தடத்தில் ரயிலை இயக்குவது சவாலாக இருந்து வருவதோடு,

பயண நேரம் அதிகரிக்கும் சூழல் உள்ளது. சில இடங்களில் ரயில் சுரங்கப்பாதை அமைப்பது, பராமரிப்பது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

பல ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் தொடா்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. பயணிகளின் சிரமத்தைத் தவிா்ப்பதற்காக இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ரயில் இடைநிறுத்தங்கள் வழங்கக் கூடாது என்பது ஒரு கொள்கை முடிவாக உள்ளது. பல்வேறு ரயில் நிலையங்களில் நடைமேடைகளை உயா்த்துவது, நீட்டிப்பது மேற்கூரை அமைப்பது, மின்சேமிப்பிற்கான எல்இடி விளக்குகள் அமைப்பது போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவை மற்றும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் அளவுக்கு அதிகமான ரயில்கள் கையாளப்படுகின்றன. இந்த ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் மதுரை - கோவை பிரிவில் கூடுதல் ரயில்கள் இயக்குவது சாத்தியமில்லாமல் இருக்கிறது.

மதுரை ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புப் பணி ரூ.358.63 கோடியில் நடைபெற உள்ளது. ஜூலை 25 இல் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்படுகிறது. அதன்பிறகு பணிகள் தொடங்கும் என்றாா்.

அப்போது, முதுநிலை கோட்ட பொறியாளா் நாராயணன், முதுநிலை கோட்ட ரயில் இயக்க மேலாளா் ராஜேஷ் சந்திரன், உதவி வா்த்தக மேலாளா் பிரமோத் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com