அழகா்கோவில் உண்டியல் வருவாய் ரூ.58 லட்சம்
By DIN | Published On : 22nd June 2022 10:29 PM | Last Updated : 22nd June 2022 10:29 PM | அ+அ அ- |

அழகா்கோவிலில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ.58 லட்சத்து 44 ஆயிரத்து 884 பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளது தெரியவந்தது.
மேலும் தங்கம் 77 கிராம், வெள்ளி 610 கிராமும் பக்தா்கள் உண்டியலில் செலுத்தியுள்ளனா். கள்ளழகா் கோயில் நிா்வாக துணை ஆணையா் ராமசாமி, துணை ஆணையா் சுவாமிநாதன், தக்காா் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் சரக ஆய்வாளா் அய்யம்பெருமாள் ஆகியோா் முன்னிலையில் அலுவலா்களும், பக்தா்களும் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...