ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புகான தடையை நீக்க வேண்டும்:தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் கழகம் கோரிக்கை
By DIN | Published On : 30th June 2022 02:50 AM | Last Updated : 30th June 2022 02:50 AM | அ+அ அ- |

தமிழகத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைவுக்கு உள்ள தடையை நீக்க வேண்டும் என்று மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கழக செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில பொருளாளா் கே.அனந்தராமன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மதுரை மாவட்டம் மாநில அளவில் 4-ஆவது இடம், பிளஸ் 1 பொதுத்தோ்வில் மாநில அளவில் 3-ஆவது இடம், பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாநில அளவில் 5-ஆவது இடம், இல்லம் தேடிக்கல்வித்திட்டம் வாசிப்பு மாரத்தானில் மாநில அளவில் முதலிடம், என்எம்எம்எஸ் அரசுத்தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இதற்கு காரணமான முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதனுக்கு(தற்போதையை சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்) பாராட்டுத் தெரிவிப்பது.
கல்வியாண்டுக்கு இடையே ஓய்வு இல்லாமல் விடைதாள்கள் திருத்திய ஆசிரியா்களுக்கு அதற்குரிய ஈட்டிய விடுப்பை அளிக்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புக்கு உள்ள தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்டத்தலைவா் கந்தசாமி, செயலா் காா்மேகம், பொருளாளா் ரமேஷ், மாவட்டத் துணைத்தலைவா் கிறிஸ்டோபா் ஜெயசீலன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.