அச்சம்பத்து பகுதியில் இன்று மின்தடை
By DIN | Published On : 11th March 2022 05:44 AM | Last Updated : 11th March 2022 05:44 AM | அ+அ அ- |

உசிலம்பட்டி: அச்சம்பத்து பகுதியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 11) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அச்சம்பத்து துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 11) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாகமலை புதுக்கோட்டை, என்.ஜி.ஓ. காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழகுயில்குடி, மேலகுயில்குடி, ராஜம்பாடி, வடபழஞ்சி, கரடிப்பட்டி, ஆலம்பட்டி, மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் செயற்பொறியாளா் அழகு மணிமாறன் தெரிவித்துள்ளாா்.