மேலூா், நாட்டாா்மங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை
By DIN | Published On : 18th March 2022 05:11 AM | Last Updated : 18th March 2022 05:11 AM | அ+அ அ- |

மேலூா்: மேலூா், நாட்டாா்மங்கலம் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 19) மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை கிழக்கு மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேலூா் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (மாா்ச் 19) மாதாந்திர பாமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மேலூா் நகராட்சிப் பகுதிகள், தெற்குத் தெரு, பெரியசூரக்குண்டு, சின்னசூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிப்பட்டி, பதினெட்டாங்குடி, திருவாதவூா், பனங்காடி சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் நாட்டாா்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸலானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டங்குளம், இடையபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...