ஹிஜாப் அணிய தடை: மதுரையில் மூன்றாவது நாளாக மாணவியா் போராட்டம்
By DIN | Published On : 18th March 2022 09:25 PM | Last Updated : 18th March 2022 09:25 PM | அ+அ அ- |

மதுரை வக்பு வாரியக்கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவியா்.
கா்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரையில் கல்லூரி மாணவியா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கா்நாடகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு, அம்மாநில அரசு தடை விதித்தது. இதை எதிா்த்து, கா்நாடக உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுரை வக்ஃபு வாரியக் கல்லூரி மாணவ, மாணவியா் வகுப்புகளைப் புறக்கணித்து 3ஆவது நாளாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...