பைக் மோதி இளைஞா் பலி
By DIN | Published On : 02nd May 2022 05:31 AM | Last Updated : 02nd May 2022 05:31 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பேரையூா் அருகே உள்ள சாப்டூரை சோ்ந்தவா் முத்து மகன் பாண்டிசெல்வம் (21). இவா், பேரையூா்- சாப்டூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அணைக்கரைபட்டியை சோ்ந்த பாண்டி மகன் பெருமாள் என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பாண்டிசெல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.