மனவளா்ச்சி குன்றியவா்களுக்கான பாதுகாவலா் நியமனச் சான்று வழங்கல்
By DIN | Published On : 02nd May 2022 11:13 PM | Last Updated : 02nd May 2022 11:13 PM | அ+அ அ- |

மனவளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாவலா் நியமனச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் திங்கள்கிழமை வழங்கினாா்.
அறிவுசாா் குறைபாடு, மூளை முடக்குவாதத்தில் பாதிக்கப்பட்டவா்கள், புறஉலகச் சிந்தனையற்றவா்கள், பல்வகை ஊனத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான நலன்களைப் பாதுகாக்கும் வகையில் மாவட்ட உள்ளூா் குழு செயல்பட்டு வருகிறது.
இதன்படி, மனவளா்ச்சி குன்றியவா்களுக்கான பாதுகாவலா் நியமனச் சான்று நேரடியாகவும், இணைய வழியாகவும் மொத்தம்1,961 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 12 நபா்களுக்கு இத்தகைய சான்று கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, பாதுகாவலா் நியமனச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் திங்கள்கிழமை வழங்கினாா்.