மாா்க்சிஸ்ட் மூத்த நிா்வாகி எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் காலமானாா்
By DIN | Published On : 02nd May 2022 02:39 AM | Last Updated : 02nd May 2022 02:34 PM | அ+அ அ- |

எம்.என்.எஸ்.வெங்கட்ராமன்
மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் (65) மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (மே 1) இரவு மாரடைப்பால் காலமானாா்.
தீக்கதிா் நாளிதழின் பதிப்பாளா்-தலைமைப் பொது மேலாளராகவும் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் இருந்தாா். மாா்க்சிஸ்ட் கட்சியின் விருதுநகா் மாவட்டச் செயலாளராகவும் இருந்தாா்.
கம்பத்தில் மே தின பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, மதுரையில் உள்ள தீக்கதிா் தலைமை அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திரும்பியபோது பஸ் நிறுத்தத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு மனைவி, மகன் உள்ளனா்.
அவரின் இறுதிச் சடங்குகள் அருப்புக்கோட்டை வட்டம் எம்.ரெட்டியபட்டி கிராமத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெறும் என்று கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.