கல்லூரி ஆசிரியை வீட்டில் நகை, மடிக்கணினி திருட்டு
By DIN | Published On : 16th May 2022 12:25 AM | Last Updated : 16th May 2022 12:25 AM | அ+அ அ- |

மதுரையில் தனியாா் கல்லூரி ஆசிரியை வீட்டில் 4 பவுன் நகை மற்றும் மடிக்கணினியை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.
மதுரை பெத்தானியாபுரம் அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த மகாராஜன் மனைவி அபா்ணா(29). தனியாா் கல்லூரியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் சனிக்கிழமை காலையில் வீட்டைப்பூட்டி விட்டு வெளியில் சென்றுவிட்டாா். பின்னா் இரவில் வந்து பாா்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, மடிக்கணினி, ஒரு தங்கத்தோடு ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து, அபா்ணா அளித்த புகாரின் பேரில் கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...