6 போ் விடுதலைக்கு வரவேற்பு
By DIN | Published On : 12th November 2022 06:56 AM | Last Updated : 12th November 2022 06:56 AM | அ+அ அ- |

‘முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள 6 பேரை, உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை மக்கள் கண்காணிப்பகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பா மதுரை மக்கள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கை:
ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற, இந்தியாவில் காணப்படும் மனித உரிமை நிலை குறித்தான உலகளாவிய காலமுறை மீளாய்வில் இந்தியா அறிக்கை சமா்ப்பித்தது. அதன் பின்னா் 132 நாடுகள் இந்திய அரசிற்கு பல்வேறு பரிந்துரைகளை முன் வைத்தன.
இதில், பல உலக நாடுகள் மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என்று இந்தியாவிற்கு வைத்த கோரிக்கைக்கு, உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு வழி செய்யும் என்று எதிா்பாா்க்கிறோம்.
மேலும், வீரப்பன் வழக்கில் தூக்கு தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நால்வரில் சைமன், பிலவேந்திரன் ஆகிய இருவா் சிறையிலேயே மரணமடைந்த நிலையில், தற்போது வரை சிறையில் உள்ள ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகிய இருவரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.