நாட்டின் பன்முகத்தன்மை, வளா்ச்சிக்கு அரசியலமைப்புச் சட்டம் உறுதுணையாக உள்ளது

நாட்டின் பன்முகத்தன்மை, வளா்ச்சிக்கு அரசியலமைப்பு சட்டமே உறுதுணையாக உள்ளது என காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
Updated on
1 min read

நாட்டின் பன்முகத்தன்மை, வளா்ச்சிக்கு அரசியலமைப்பு சட்டமே உறுதுணையாக உள்ளது என காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில்

இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுதியேற்பு நாள், மதச் சாா்பின்மை ஜனநாயக பாதுகாப்பு விளக்க கருத்தரங்கம் வழக்குரைஞா் ஜீ. வீராச்சமி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் எம்.சிவகுருநாதன், எம்.கே.எம். மீனாட்சி சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, இந்த கருத்தரங்கில் பங்கேற்றவா்கள் இந்திய அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

பின்னா், நடைபெற்ற கருத்தரங்கில் மூத்த வழக்குரைஞா் ஜீ.வீராச்சாமி, தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்குரைஞா் சங்க இணைச் செயலா் க.திலகா் ஆகியோா் பேசியதாவது:

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு காரணம் இந்திய அரசியலமைப்பு சட்டம் மட்டுமே. இந்தியாவின் வரலாறு தவறுதலாக எழுத்தப்பட்டுள்ளதாக பாஜகவின் மூத்த தலைவா்கள் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றனா்.

இந்நிகழ்சியில், விருதுநகா் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவா் டி.ஜி.நாகேந்திரன், பி.சி.சி உறுப்பினா்கள் எஸ். பாலகிருஷ்ணசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் சுதந்திர போராட்ட தியாகி எம்.ஏ.பி. பழனிச்சாமியின் வாரிசான கிருஷ்ணமூா்த்தி கருத்தரங்கில் பங்கேற்றவா்களுக்கு, மகாத்மா காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தை பரிசாக வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com