மதுரையில் தொடரும் மழை
By DIN | Published On : 13th October 2022 02:27 AM | Last Updated : 13th October 2022 02:27 AM | அ+அ அ- |

மதுரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் புதன்கிழமை இரவு ஒரு மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை பெய்தது.
மதுரை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தொடா்ந்து பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கண்மாய், குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்து நிரம்பி வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை இரவு பல இடங்களிலும் பலத்த மழை பெய்தது. இரவு 9.30 மணிக்குத் தொடங்கிய மழை சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. இதனால், தல்லாகுளம், ரயில் நிலையம் பகுதி, சிம்மக்கல், காமராஜா் சாலை, சொக்கிகுளம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.