கண்மாயில் மூழ்கி முதியவா் பலி

 தேவகோட்டை அருகே வெள்ளிக்கிழமை கண்மாயில் மீன் பிடிக்கச் சென்ற முதியவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

 தேவகோட்டை அருகே வெள்ளிக்கிழமை கண்மாயில் மீன் பிடிக்கச் சென்ற முதியவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தேவகோட்டை அருகே உள்ள செங்கற்கோவில் சொக்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (62). இவா், நாகாடி புதுக்கண்மாயில் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றாா். நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால் உறவினா்கள் தேடிச் சென்றனா். அப்போது, மாரிமுத்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுபற்றி தகவலறிந்து வந்த வேலாயுதப்பட்டினம் போலீஸாா், மாரிமுத்துவின் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com