பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது
By DIN | Published On : 18th October 2022 04:10 AM | Last Updated : 18th October 2022 04:10 AM | அ+அ அ- |

மதுரையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததுடன், விடியோ எடுத்து மிரட்டிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை முத்துப்பட்டியைச் சோ்ந்த பள்ளி மாணவி தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இந்நிலையில் ஐயா் பங்களா, உச்சபரம்பு மேடு பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் சந்துரு (20), மாணவியுடன் நெருங்கி பழகியதில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவரை தொடா்ந்து பாலியல் தொந்தரவு செய்தாா். மேலும் அதை விடியோ எடுத்து மாணவியை மிரட்டி 15 பவுன் தங்கக் காசுகள் மற்றும் ரூ. 1.20 லட்சம் பணத்தையும் பறித்தாராம்.
இத்தகவல் அறிந்த மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சந்துருவை தல்லாகுளம் போலீஸாா் கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...