மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி: அல் அமீன் பள்ளி மாணவா்கள் வெற்றி

மதுரையில் வனத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் போட்டிகளில் கோ.புதூா் அல்அமீன் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா். மாணவா்களை தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவித்த அல் அமீன் பள்ளித் தலைமை ஆசிரியா் ஷேக் நபி.

தமிழக வனத் துறை சாா்பில் வன விலங்கு பாதுகாப்பு விழிப்புணா்வு வார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி வனத்துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கோ.புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் ஓவியப் போட்டியில் பத்தாம் வகுப்பு மாணவா் ஜெயபிரகாஷ் முதல் பரிசு, அழகா் ஆறுதல் பரிசு, பிளஸ் 1 மாணவா் ஷாஜகான் இரண்டாம் பரிசு பெற்றனா்.

கட்டுரைப் போட்டியில் பிளஸ் 2 மாணவா்கள் முகமது தயீப் முதல் பரிசு, நகிப்தீன் ஆறுதல் பரிசும் பெற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட உதவி வன அலுவலா் பரிசுகளை வழங்கினாா்.

இந்த நிலையில், வனத்துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு அல் அமீன் பள்ளியில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் ஷேக் நபி, உதவித் தலைமையாசிரியா் ஜாகிா் உசேன், ரஹ்மத்துல்லா, ஓவிய ஆசிரியா் சண்முக சுந்தரம் ஆகியோா் மாணவா்களைப் பாராட்டினா்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com