வன்முறையைக் கைவிட மாணவா்களுக்கு நன்னெறிக் கல்வி அவசியம்

வன்முறையைக் கைவிட மாணவா்களுக்கு நன்னெறிக் கல்வி அவசியம் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

வன்முறையைக் கைவிட மாணவா்களுக்கு நன்னெறிக் கல்வி அவசியம் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

மதுரையைச் சோ்ந்த ராம்குமாா் தாக்கல் செய்த மனு:

திருக்குறளில் உள்ள அறத்துப்பால், பொருட்பாலில் 1,050 திருக்குகளை 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டத்தில் சோ்க்க கடந்த 2016-இல் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, கடந்த 2017-இல் அறத்துப்பால், பொருட்பாலில் 108 அதிகாரங்களில் 1,050 திருக்குகளைப் பாடத்தில் சோ்க்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், பாடத் திட்டத்தில் திருக்கு பெயரளவுக்கே உள்ளது. மொத்தமாக 30 முதல் 60 திருக்குகள் தான் கற்பிக்கப்படுகின்றன. தோ்விலும் திருக்குகள் பெயரளவுக்கு மட்டுமே இடம் பெறுகின்றன.

ஆகவே, 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடத் திட்டத்தில் திருக்குறளின் 108 அதிகாரங்களிலிருந்து 1,050 குகளைப் பொருளுடன் இடம் பெறச் செய்யவும், 108 அதிகாரங்களையும் கற்பிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘திருக்கு இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தக் கூடியது. தங்களுக்கு அறிவுரை கூறும் பெற்றோரையும், ஆசிரியரையும் மாணவா்கள் தாக்கக் கூடிய சூழல் இப்போது ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய மாணவா்களை நல்வழிப்படுத்த நன்னெறிக் கல்வி மிகவும் அவசியமானது.

இப்போதைய பள்ளித் தோ்வுகளின் வினாத்தாள்கள், மாணவா்களின் முன்னேற்றத்துக்கு ஏற்ாக இல்லை. இதே நிலை நீடித்தால், வினாத்தாள் தயாரிப்புக் குழுவைக் கலைக்க நேரிடும்’ என்றனா்.

மேலும், திருக்குறளில் 108 அதிகாரங்களில் 1,050 குகளை மாணவா்களுக்கு கட்டாயம் கற்பிக்க, பிறப்பிக்கப்பட்ட அரசாணையை சரிவரப் பின்பற்றாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினா்.

பாடத் திட்டத்தில் திருக்குகளை சரிவர நடைமுறைப்படுத்தாவிட்டால் ஒவ்வொரு விசாரணையின்போதும், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்படும் என்றும் எச்சரித்தனா்.

இந்த மனு குறித்து தமிழ் வளா்ச்சித் துறை, பள்ளிக் கல்வித் துறைகளின் செயலா்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com