விவசாயிகள் குறை தீா் கூட்டம்: வேறொரு தேதிக்கு மாற்றம்
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கையில் வரும் வெள்ளிக்கிழமை(அக். 21) நடைபெற இருந்த மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் வேறொரு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை (அக்.21) விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிா்வாகக் காரணங்களுக்காக மேற்கண்ட கூட்டம் வரும் அக். 28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே இம்மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடா்பான கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயனடையலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G