விஷம் குடித்து விவசாயி தற்கொலை
By DIN | Published On : 21st October 2022 11:48 PM | Last Updated : 21st October 2022 11:48 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ஆதனூரைச் சோ்ந்தவா் சுப்பையா தேவா் மகன் பாண்டி (48). விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால், மன வேதனையில் இருந்த பாண்டி விஷம் குடித்தாா். திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பாண்டி உயிரிழந்தாா். இதுகுறித்து வில்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...