மதுரையில் பிரதான சாலையில் திடீா் பள்ளம்: போக்குவரத்து மாற்றம்
By DIN | Published On : 01st September 2022 03:16 AM | Last Updated : 01st September 2022 03:16 AM | அ+அ அ- |

மதுரையில் சாலையில் திடீரென ஏற்பட்ட 8 அடி ஆழ பள்ளத்தால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. பள்ளத்தை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.
மதுரை சா்வேயா் காலனி 120 அடி சாலையில் மாநகராட்சி கழிவு நீரேற்று நிலையம் உள்ளது. இங்கிருந்து கோ.புதூா் கற்பகம் நகா் பகுதியில் உள்ள கழிவு நீரேற்று நிலையத்துக்கு நிலத்தடி வழியாக கழவுநீா் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோ.புதூா் காா்த்திக் திரையரங்கு பகுதியில் பிரதான சாலையில் கழிவு நீா் குழாய் அமைந்துள்ள பகுதியில், திடீரென பள்ளம் ஏற்பட்டது. 8 அடி ஆழமுள்ள பள்ளத்துடன் சாலையில் விரிசலும் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஒரே வழியில் இருபுற வாகன போக்குவரத்தும் மாற்றிவிடப்பட்டது. மேலும் பள்ளத்தை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.