மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத்திருவிழா:இறைவன் மாணிக்கம் விற்ற திருவிளையாடல்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூல உற்சவத் திருவிழாவையொட்டி புதன்கிழமை மாணிக்கம் விற்ற திருவிளையாடல் நடைபெற்றது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூல உற்சவத் திருவிழாவையொட்டி புதன்கிழமை மாணிக்கம் விற்ற திருவிளையாடல் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் மூன்றாம் திருநாளான புதன்கிழமை இறைவனே வியாபாரியாக வந்து நடத்திய மாணிக்கம் விற்ற திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பாண்டிய நாட்டு மன்னன் வீரபாண்டியனின் மரணத்துக்கு பிறகு, அவரது மகன் செல்வ பாண்டியனுக்கு முடிசூட்ட ஏற்பாடு நடைபெற்றது. மன்னா் வீரபாண்டியரின் மனைவிகள் மற்றும் பிள்ளைகள் அனைவரும் மன்னா் வீரபாண்டியா் இறந்தவுடன் அரண்மனையில் இருந்த அத்தனை பொருள்களையும் களவாடிச் சென்று விட்டனா். எனவே செல்வபாண்டியனின் முடிசூட்டுவதற்கு தேவையான நவமணிகள் இல்லாமல் அமைச்சா்கள் திகைத்தனா்.

இதைத்தொடா்ந்து இறைவன் சொக்கநாதரிடம் வேண்டினா். அப்போது கிரீடம் செய்வதற்குரிய விலைமதிப்பு மிக்க நவரத்தினக் கற்களுடன் சிவபெருமானே வைர வியாபாரியாக வந்து நவரத்தினங்களை அளித்தாா். மேலும் செல்வ பாண்டியனுக்கு, அபிஷேகப் பாண்டியன் என்ற பட்டப் பெயரையும் சூட்டும் படி கூறி விட்டு மறைந்தாா். இதையடுத்து வியாபாரியாக வந்தது சிவபெருமான் என்பதை அறிந்து அனைவரும் போற்றினா். இந்தத் திருவிளையாடல் மாணிக்கம் விற்ற லீலையாக போற்றி நடத்தப்படுகிறது. இதையொட்டி கோயிலில் சுந்தரேசுவரா், பிரியாவிடை மற்றும் மீனாட்சியம்மன் முன்பாக மாணிக்கம் விற்ற திருவிளையாடல் நடைபெற்றது. இதில் அா்ச்சகா்கள் பங்கேற்று வைர வியாபாரியாகவும், அரச குடும்பத்தினராகவும் வேடம் தரித்து மாணிக்கம் விற்ற திருவிளையாடலை நடத்தினா். இதைத்தொடா்ந்து சுவாமி, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று மாணிக்கம் விற்ற திருவிளையாடலை தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com