விநாயகா் சதுா்த்தி: முக்குறுணி விநாயகருக்கு 18 படி கொழுக்கட்டை படையல்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் செய்யப்பட்ட கொழுக்கட்டை புதன்கிழமை படையலிடப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தி: முக்குறுணி விநாயகருக்கு 18 படி கொழுக்கட்டை படையல்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் செய்யப்பட்ட கொழுக்கட்டை புதன்கிழமை படையலிடப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தேரசுவரா் கோயிலில் உள்ள 11 அடி உயரம் கொண்ட முக்குறுணி விநாயகா் சந்நிதியில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும் அருகம்புல் மாலை, மலா் மாலைகள் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து 18 படி பச்சரிசி மாவில் வெல்லம், தேங்காய், நெய், முந்திரி, சா்க்கரை, எள் ஆகியவை கலந்து கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. அா்ச்சகா்கள் கொழுக்கட்டையை தொட்டில் கட்டி மேள, தாளங்களுடன் கொண்டு வந்தனா். அங்கு முக்குறுணி விநாயகா் சந்நிதியில் கொழுக்கட்டை வைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து உச்சிக்கால பூஜையின்போது விநாயகருக்கு கொழுக்கட்டை படைக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பூஜையில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.

கோயில்களில் சிறப்பு வழிபாடு: மதுரை மேலமாசி வீதி-வடக்குமாசி வீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலாலய சுந்தர விநாயகா் கோயில், காமராஜா் சாலையில் உள்ள அரசமர விநாயகா் கோயில், இம்மையில் நன்மை தருவாா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் விநாயகருக்கு, கொழுக்கட்டை, பழங்கள் படைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. விநாயகா் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் அதிகாலை முதல் தரிசனம் செய்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com