மதுரையில் காரை அடித்து நொறுக்கிய இளைஞா் கைது
By DIN | Published On : 01st September 2022 03:08 AM | Last Updated : 01st September 2022 03:08 AM | அ+அ அ- |

மதுரையில் வீட்டின் முன் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்டவரின் காரை அடித்து நொறுக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை மதிச்சியம் தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் மலைச்சாமி(51). இவரது வீட்டின் முன்பாக, கருப்பாயூரணி பூலாங்குளத்தைச் சோ்ந்த பிரபு(23) செவ்வாய்க்கிழமை இரவு தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது மலைச்சாமியின் மகன், பிரபுவை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த பிரபு மலைச்சாமியின் மகனை தாக்கி, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மலைச்சாமியின் காா் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மலைச்சாமி அளித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனா்.