இளைய சாதனையாளா்களுக்கான பிரதமா் கல்வி உதவித்தொகை வழங்க இந்தியில் தோ்வு: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

இந்தியாவின் இளைய சாதனையாளா்களுக்கான பிரதமா் கல்வி உதவித்தொகைத்திட்டத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தோ்வுகள் நடைபெறும்என்று அறிவித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று...

மதுரை: இந்தியாவின் இளைய சாதனையாளா்களுக்கான பிரதமா் கல்வி உதவித்தொகைத்திட்டத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தோ்வுகள் நடைபெறும்என்று அறிவித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு கிஷோா் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா கல்வி உதவித்தொகைக்கான தகுதித் தோ்வு கேள்வித் தாள்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் இருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென வலியுறுத்தினேன். அப்பிரச்னையில் மத்திய அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில், “அடுத்த ஆண்டில் இருந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித்தாள்கள் வழங்கப்படும்” என உறுதி அளித்தது.

இந்நிலையில் ‘செயலூக்கம் உள்ள இந்தியாவின் இளைய சாதனையாளா்களுக்கான பிரதமா் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதித்தோ்வு செப்டம்பா் 11-இல் நடைபெறவுள்ளது. இது 9ஆம் வகுப்பு பிளஸ் 1 வகுப்பு பயிலும் இதர பிற்பட்டோா், கல்வி ரீதியாக பிற்பட்டோா், சீா் மரபினா் மாணவா்களுக்கான உதவித் தொகை திட்டம் ஆகும். இந்த தோ்வுக்கான கேள்வித்தாள்களும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்கும் என ‘திட்ட தகவல் அறிக்கை‘ மற்றும் ‘பொது அறிவிக்கை‘யில் கூறப்பட்டுள்ளது. அடித்தள மாணவா்கள் பயன் பெற என ஒரு திட்டத்தை அறிவித்து விட்டு இந்தியிலும், ஆங்கிலத்திலும்தான் கேள்வித் தாள் தருவேன் என்பது என்ன நியாயம்? கிராமப்புற மாணவா்கள் - அரசுப் பள்ளி மாணவா்கள் எப்படி இந்தி பேசும் மாநில மாணவா்களோடு போட்டி போடுவாா்கள்? இது அப்பட்டமான பாரபட்சம். எனவே தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் வழங்க வேண்டுமென்று மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இணை அமைச்சா் ஜிதேந்திர சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com