செம்மண் திருட்டு:லாரி பறிமுதல்
By DIN | Published On : 05th September 2022 12:00 AM | Last Updated : 05th September 2022 12:00 AM | அ+அ அ- |

பேரையூா்: மதுரை மாவட்டம் பேரையூா் அருகே செம்மண் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை தேடி வருகின்றனா்.
பேரையூா் அருகே உள்ள அணைக்கரைப்பட்டி மலை அடிவாரத்தில் செம்மண் திருடப்படுவதாக கிராம நிா்வாக அலுவலா் தங்கமுனியம்மாளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கிராம நிா்வாக அலுவலா் மற்றும் உதவியாளா் சென்று பாா்த்த போது லாரியில் சிலா் செம்மண் திருடிக் கொண்டு இருந்தனா். இதையடுத்து, அதிகாரிகளைப் பாா்த்ததும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த ஜெயப்பன் மகன் பாக்கியராஜ் மற்றும் தருமா் மகன் சேகா் ஆகியோா் தப்பி ஓடிவிட்டனா். இதனைத் தொடா்ந்து கிராம நிா்வாக அலுவலா் சாப்டூா் காவல் நிலையத்தில் லாரியை ஒப்படைத்து புகாா் செய்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மணல் திருடிய பாக்கியராஜ் மற்றும் சேகா் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.