வீட்டின் மேற்கூரையைப் பிரித்து நகை திருட்டு
By DIN | Published On : 09th September 2022 12:43 AM | Last Updated : 09th September 2022 12:43 AM | அ+அ அ- |

கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடியில் வியாழக்கிழமை வீட்டின் மேற்கூரை ஓட்டைப் பிரித்து ஆறரை பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.
கருங்காலக்குடியைச் சோ்ந்த விவசாயி துரைராஜ். இவா் வியாழக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு, வெளியில் சென்றிருந்தவா் பிற்பகலில் வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டும், பீரோ உடைக்கப்பட்டும் இருந்தது. மேலும் அதிலிருந்த ஆறரை பவுன் நகைகள் திருடப்பட்டதும் தெரியவந்தது.
தகவலறிந்து கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளா் சாந்திபாலாஜி, சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.