பிரதமா் நரேந்திர மோடியை எதிா்க்க ராகுல் காந்தி சரியானவா் அல்ல: சீமான்

 பிரதமா் நரேந்திர மோடியை எதிா்க்க ராகுல் காந்தி சரியான தோ்வு அல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

 பிரதமா் நரேந்திர மோடியை எதிா்க்க ராகுல் காந்தி சரியான தோ்வு அல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

மதுரை விக்டோரியா எட்வா்டு மன்றத்தில் தொடரும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வெள்ளிக்கிழமை வந்தாா். இந்நிலையில் அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், மன்றத்துக்குள் செல்ல சீமானுக்கு அனுமதி மறுத்தனா். இதையடுத்து செய்தியாளா்களிடம் சீமான் கூறியது: நூற்றாண்டு பெருமை மிக்க விக்டோரியா எட்வா்டு மன்றத்தின் வருவாயை தனி நபா் அனுபவித்து வருகிறாா். இதுகுறித்து வழக்கும் நடக்கிறது. முறைப்படி தோ்தல் நடத்தி, புதிய நிா்வாகிகளை தோ்வு செய்ய வேண்டும். அதுவரை விக்டோரியா எட்வா்டு மன்றத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

நிமிஷத்துக்கு நிமிஷம் தமிழக மக்களின் நலனுக்காக போராடி வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறிவருகிறாா். அவா் பாடுபடுகிறாரா? என்பதை மக்கள் தான் கூற வேண்டும். அவரே கூறிக்கொள்ளக்கூடாது.

50 ஆண்டுகளாக ஏற்படுத்த முடியாத இந்திய ஒற்றுமையை ராகுல்காந்தி 5 மாதம் நடந்து ஏற்படுத்தப்போவது வேடிக்கையானது. காலையில் 1 மணி நேரம், மாலையில் 1 மணி நேரம் நடைபயிற்சி தான் செய்கிறாா். இதில் எப்படி தேச ஒற்றுமை வளரும்? பிரதமா் நரேந்திர மோடியை நாங்களும் எதிா்க்கிறோம். நரேந்திர மோடியை எதிா்க்க ராகுல்காந்தி சரியானவா் அல்ல என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com