பாரம்பரிய விழா போட்டி:பாத்திமா கல்லூரி வெற்றி
By DIN | Published On : 10th September 2022 10:47 PM | Last Updated : 10th September 2022 10:47 PM | அ+அ அ- |

தானம் கல்வி நிலையம் நடத்திய பாரம்பரிய விழா போட்டிகளில், வெற்றி பெற்ற பாத்திமா கல்லூரிக்கு சனிக்கிழமை பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.
மலைப்பட்டி தானம் கல்வி நிலையம் சாா்பில் பாரம்பரிய விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. மதுரை காமராஜா் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் ஜி.சேதுராமன், தொல்லியல் அறிஞா் வி.வேதாச்சலம், தானம் அறக்கட்டளை சுற்றுலா ஆலோசகா் கே.பி.பாரதி, பத்திரிகையாளா் ம.திருமலை ஆகியோா் பேசினா்.
கல்லூரி மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட பல்வேறுபோட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற பாத்திமா கல்லூரிக்கு, நிகழ் ஆண்டுக்கான பாரம்பரிய விழா சுழற்கோப்பை, ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக, விக்கிரமங்கலத்தில் சனிக்கிழமை காலை பாரம்பரிய நடைப் பயணம் நடைபெற்றது.